Shanmugan Murugavel / 2021 ஜனவரி 19 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க செனட்டில் தனது ஆசனத்தை கமலா ஹரிஸ் இராஜினாமா செய்துள்ளார். ஐ. அமெரிக்காவின் முதலாவது பெண் உப ஜனாதிபதியாகப் நாளை பதவியேற்பதற்கு தயார்படுத்தும் பொருட்டே கமலா ஹரிஸ் இராஜினாமா செய்திருந்தார்.
செனட்டானது 50 ஜனநாயகக் கட்சியினரையும், 50 குடியரசுக் கட்சியினரையும் கொண்டுள்ள நிலையில், அங்கு தீர்மானிக்கும் சக்தியாக உப ஜனாதிபதியாக கமலா ஹரிஸே விளங்கப் போகின்றார்.
அந்தவகையில், செனட்டை ஆறு ஆண்டுகளில் முதற்தடவையாக ஜனநாயகக் கட்சி கட்டுப்படுத்தவுள்ளதுடன், அக்கட்சியின் செனட்டர் சக் ஹுமர், செனட்டின் பெரும்பான்மைத் தலைவராகவுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வென்றபோது முதற்தடவையாக செனட்டுக்கு கமலா ஹரிஸ் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
25 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago
4 hours ago