2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பைடனின் வெற்றியை உறுதிப்படுத்திய ஜோர்ஜியா

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 20 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மீளெண்ணிக்கையையடுத்து ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடன், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஜோர்ஜியாவில் தோற்கடித்துள்ளதாக அம்மாநில அதிகாரிகள் நேற்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளின்படி ஜனாதிபதி ட்ரம்பை விட அளிக்கப்பட்ட வாக்குகளில் ஏறத்தாழ 14,000 வாக்குகள் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பைடன் முன்னிலையிலிருந்தையடுத்து ஆறு நாள்களாக கையால் ஐந்து மில்லியன் வாக்குச்சீட்டுக்கள் எண்ணப்பட்டிருந்தன.

அதில், பைடன் 12,284 வாக்குகளால் வென்றதாக  இராஜங்கச் செயலாளர் பிறட் றஃபென்ஸ்பேர்கரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .