2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

புலிகள் தப்பியதையடுத்து பராமரிப்பாளர் கொல்லப்பட்டார்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 07 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொர்னியோ தீவிலுள்ள மிருகக்காட்சிச்சாலையொன்றிலிருந்து மிகவும் அரிதான சுமாத்ரா புலிகள் தப்பியதையடுத்து, மிருக்காட்சிச்சாலை பராமரிப்பாளரொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

18 மாதங்களுடைய பெண் புலிகளான குறித்த இரண்டும் பருவமழை காரணமாக அவற்றின் தங்குமிடம் சேதமடைந்து நிலச்சரிவொன்று ஏற்பட்டதையடுத்தே சின்கா மிருகக்காட்சிச்சாலையிலிருந்து தப்பியிருந்தன.

இலக்கொன்றால் தாக்கப்பட்டதையடுத்து ஒரு புலி நேற்று கைப்பற்றப்பட்டபோதும், மற்றையது மோசமாக இருந்ததுடன், அதை இலக்கு வைப்பது கடினமாக இருந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டது.

புலிகள் தப்பிய பின்னர் அவற்றின் வசிப்பிடத்துக்கு அருகே மிருகக்காட்சிச்சாபை பராமரிப்பாளர் இறந்தபடி கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .