2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

மேற்கு டார்ஃபரில் மோதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56ஆக உயர்வு

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 07 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சூடானின் மேற்கு டார்ஃபரில் நாட் கணக்காக இடம்பெற்ற உள்ளூர்வாசிகளுக்கிட்டையிலான மோதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது, 132 பேர் காயமடைந்துள்ளதுடன், 56ஆக உயர்ந்துள்ளதாக, ஐக்கிய நாடுகளும், உள்ளூர் வைத்தியர்கள் செயற்குழுவொன்றும் நேற்று தெரிவித்துள்ளன.

மாநிலத் தலைநகரான எல் ஜெனெய்னாவில் மோதல்கள் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்ததையடுத்து, நேற்று முன்தினம் அவசரகாலநிலையை அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தது.

மஸலிட், அரேபியக் குழுக்களின் அங்கத்தவர்களுக்கிடையிலான வன்முறையில், கனரக ஆயுதம், றொக்கெட்டால் ஏவப்படும் கிரனேட்கள் பயன்படுத்தப்படுத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், 40க்கும் மேற்பட்ட காயமடைந்தோருக்கு நேற்று சிகிச்சையளித்தாக வைத்தியரொருவர் தெரிவித்த நிலையில், அவரது வைத்தியசாலை சில தடவைகள் தாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் ஆயுதத்தைக் கொண்டிருப்பதாகவும், அது அதிக விலையில்லா விட்டால் தானும் ஒன்றைக் கொண்டிருப்பேன் எனத் தெரிவித்த வைத்தியர், நிலைமை நேற்று முன்தினம் மோசமடைந்ததாகக் கூறியுள்ளார்.

இதேவேளை, அபு ஸார் முகாம் எரிக்கப்பட்டுள்ளதாக, அறிக்கையொன்றில், அகதி, உள்ளூரில் இடம்பெயர்ந்த முகாம்களுக்கான பொது ஒருங்கிணைப்பு செயற்குழு தெரிவித்துள்ளது.

ஏறத்தாழ 3,800 பேர் தங்களது அயல் கிராமங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும், சிலர் சாட்டுக்குச் சென்றுள்ளதாக, ஐக்கிய நாடுகளின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X