2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

மாவோயிஸ்ட்களின் கண்ணிவெடி தாக்குதலில் 50 பொதுமக்கள் பலி

Super User   / 2010 மே 17 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சத்தீஸ்கார் மாநிலம் தாண்டேவாடா பகுதியில், பொதுமக்கள் பஸ்ஸொன்று மாவோயிஸ்ட் நக்சலைட்களின் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்குண்டதில் 50பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சுக்மா சாலை என்ற இடத்திலேயே இந்த இந்த கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. த்க்குதலுக்கு இலக்கான பஸ்ஸில் 15 படையினர் உட்பட பொதுமக்கள் சிலரே பயணித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பஸ்ஸில் ஆரம்பத்தி பொலிஸாரே பயணித்தனர் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் த்ற்போது அந்த பஸ்ஸில் பொதுமக்களே பயணித்ததாக பொலிஸ்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 6ஆம் திகதி தாண்டேவாடா வனப்பகுதியில் சி.ஆர்.பி.எப்.வீரர்களை மாவோயிஸ்டுகள் தாக்கியதில் 70பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையிலேயே பொதுமக்கள் பயணம் செய்த பஸ் இலக்கு வைக்கப்படுள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X