Editorial / 2020 ஜனவரி 14 , பி.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலண்டன் மற்றும் கனடாவில் இனி வரும் காலங்களில் நேரத்தை செலவிட இருப்பதாக இளவரசர் ஹரி மற்றும்
மெக்கல் தம்பதி எடுத்த முடிவுக்கு எலிசபெத் ராணி ஒப்புதல் வழங்கியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இளவரசர் ஹரிக்கும் மற்றும் அவரது மனைவி மெக்கனுக்கும் அரச குடும்பத்துடன் கருத்து வேறுபாடு நிலவுவதாக இலண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆனால், இதனை வதந்தி என்று வழக்கம்போல் இலண்டன் அரச குடும்பம் அறிவித்தது.
இந்நிலையில் இலண்டன் அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளிலிருந்து ஹரியும், அவரது மனைவி மெக்கனும் விலகுகின்றனர்
என்றும் இனி வரும் காலங்களில் இலண்டன் மற்றும் கனடாவில் தங்களது நேரத்தை செலவிட இருப்பதாகபுதன்கிழமையன்று ஹரி அறிவித்திருந்தார்.
இளவரசர் ஹரியின் இந்த முடிவை இலண்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்த நிலையில் இளவரசர் ஹரி - மெக்கலின் முடிவு குறித்து திங்கட்கிழமையன்று லண்டன் ராணி ஆலோசனை நடத்தினார்.
இதன் முடிவில் ஹரி மற்றும் மெக்கலின் முடிவுக்கு எலிசபெத் ராணி ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும், அரச குடும்பம் இதற்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.
லண்டன் இளவரசர் சார்ள்ஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹரி தனது தோழியும் காதலியுமான அமெரிக்க நடிகை மெக்கன் மார்கலை திருமணம் செய்துகொண்டார்.
இத்தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
29 minute ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
26 Oct 2025