Editorial / 2020 மே 23 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகளவில், இதுவரை 5,303,715 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 339,992ஆக உள்ளது.
இன்று காலை நிலவரப்படி, கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை, 2,158,514 என்ற அளவில் உள்ளது.
அமெரிக்கா 1,645,094, பிரேசில் 332,382, ரஷ்யா 326,448, ஸ்பெயின் 281,904, பிரிட்டன் 254,195, இத்தாலி 228,658, பிரான்ஸ் 182,219, ஜெர்மனி 179,713, துருக்கி 154,500, ஈரான் 131,652, இந்தியா 124,794, பெரு 111,698, சீனா 82,971, கனடா 82,480, சவுதி அரேபியா 67,719 என்ற வகையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை உள்ளது.
மொத்த பாதிப்புகள் எண்ணிக்கையில், தென் அமெரிக்க நாடான, பிரேசில், தற்போது 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. அது ரஷ்யாவை முந்திச் சென்று அந்த இடத்தை பிடித்துள்ளது.
மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில், இந்தியா தனது மக்கள் தொகையில் ஒரு மில்லியனுக்கு மிகக் குறைந்த சோதனைகளை நடத்தியுள்ள நாடு என்ற இடத்தை பிடித்துள்து.
ஒரு மில்லியன் மக்களுக்கு 1,973 என்ற அளவில், சோதனைகளை, இந்தியா நடத்தியுள்ளது. இந்த சோதனைகள் பிரேசில் நடத்திய அளவைவிட பாதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago