2021 மார்ச் 04, வியாழக்கிழமை

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பரிஸ் ஹில்டன் கைது

Super User   / 2010 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்க மொடல் அழகியும் நடிகையும்  பாடகியுமான பரிஸ் ஹில்டன், கொகேய்ன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

29 வயதான பரிஸ் ஹில்டன், நேற்றிரவு லாஸ் வேகாஸ் நகரில்  வைத்து கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதாக லாஸ் வேகாஸ் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஹில்டன் பயணம் செய்த  கார் ஒன்றை பொலிஸார் சோதனையிட்டபோது கெகேய்ன் என சந்தேகிக்கப்படும்  தூள்களை கைப்பற்றியதாக அவ்வதிகாரி தெரிவித்தார்.

மறியலில் வைக்கப்பட்ட பரிஸ் ஹில்டன் இன்று அதிகாலை விடுதலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக வழக்கு விபரங்களை மேற்படி அதிகாரி வெளியிடவில்லை.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .