2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

2 மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளதாக அறிவிப்பு

Freelancer   / 2025 டிசெம்பர் 30 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்திலுள்ள இரண்டு மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளதால் தேசிய மின் கட்டமைப்புக்கு 600 மெகாவோட் மின்சாரம் இழக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

குறித்த மின்பிறப்பாக்கிகள் தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருவதாகவும், அவற்றை எதிர்வரும் ஜனவரி முதலாவது வாரத்தில் மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபைத் தெரிவித்துள்ளது. 

நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தில் உள்ள தற்போது ஒரு மின்பிறப்பாக்கி மாத்திரமே செயற்பாட்டில் உள்ளதாகவும், இது தேசிய மின் கட்டமைப்புக்கு 300 மெகாவோட் மின்சாரத்தை வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, நீர் மின்சாரம் மூலம் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுப்பட்டு வருவதால், நாளாந்த மின்சார விநியோகத்தில் எந்தவித இடையூறுகளும் ஏற்படவில்லை என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X