2021 மார்ச் 08, திங்கட்கிழமை

ஆப்கானில் தற்கொலை தாக்குதல்; மூவர் பலி

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சுமார் மூவர் பலியாகியுள்ளனர்.

கிழக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளமொன்றுக்கு அருகிலேயே தற்கொலைக் கார்க் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூஹோஸ்ட் நகரிலுள்ள இவ் இராணுவ முகாம் நுழைவாயிலே இத்தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதலுக்கு தலிபான்கள் உரிமை கோரியுள்ளனர்.

அண்மைக்காலமாக கூஹோஸ்ட் நகரத்தில் கிழக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள ஏனைய நகரங்களைப் போன்று வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .