2020 நவம்பர் 28, சனிக்கிழமை

பாகிஸ்தானில் தாக்குதல்; எண்மர் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ள  போராளிகளின் 02 தாக்குதல்களில் எண்மர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 05 பொலிஸ் உத்தியோத்தகர்களும் அடங்குகின்றனர். மேலும்,  20 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.  

சர்ஸ்ட்டா மாவட்டத்திற்கு அருகிலும் பெஷாவாரின் புறநகர்ப் பகுதியிலும் மேற்படி  தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

பொலிஸ் அணி மீது துப்பாக்கிதாரிகள் மறைந்திருந்து தாக்கியுள்ளதாகவும் இதில் 05 பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். இதன்போது, 20 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும்  அந்த நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சர்ஸ்ட்டாவில் இடம்பெற்றுள்ள தாக்குதலில் குண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பொலிஸ் வாகனத்தை நெருங்கியதும் வெடித்தது. இதன்போது, இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .