Editorial / 2020 செப்டெம்பர் 14 , பி.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 29 மில்லியனைத் தாண்டியுள்ளதுடன், 925,000க்கும் மேற்பட்டோர் கொவிட்-19-ஆல் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உலகளாவிய ரீதியில் 20 மில்லியன் அளவானோர் கொவிட்-19-இலிருந்து குணமடைந்துள்ளனர்.
ஐக்கிய அமெரிக்காவில் இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 10.05 மணி வரையில் 6,534,484 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 194,147 பேர் கொவிட்-19-ஆல் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இன்று காலை 9.51 மணி வரையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 92,071-ஆல் உயர்ந்து 4,846,427-ஆகக் காணப்படுவதுடன், கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 1,136-ஆல் உயர்ந்து 79,722-ஆகக் காணப்படுகின்றது.
பிரேஸிலானது கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட்-19-ஆலான 415 புதிய உயிரிழப்புகளையும், 14,768 புதிய கொவிட்-19 தொற்றுக்களையும் பதிவுசெய்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரமைச்சு நேற்றுத் தெரிவித்துள்ள நிலையில், அங்கு 4,330,455 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 131,625 பேர் கொவிட்-19-ஆல் உயிரிழந்துள்ளனர்.
6 minute ago
38 minute ago
49 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
38 minute ago
49 minute ago
57 minute ago