Gopikrishna Kanagalingam / 2015 செப்டெம்பர் 27 , பி.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்
27ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் முல்லைத்தீவு மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள் கடந்த வாரம், மாங்குளம் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றன.
வியாழன்று காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை தடகளப் போட்டிகள் அனைத்தும் நடைபெற்று, மாலை 3.30 மணிக்கு விருந்தினர்களின் வருகையுடன் தடகளப் போட்டிகளில் வெற்றியீட்டிய வீரர்கள் மற்றும் ஏனைய போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
புள்ளிகளடிப்படையில் கரைதுறைப்பற்று பிரதேச சம்மேளன அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்தையும் புதுக்குடியிருப்பு பிரதேச சம்மேளன அணி 115 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும் துணுக்காய் பிரதேச சம்மேளன அணி 66 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.
ஏனைய போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகள்:
கால்பந்து: புதுக்குடியிருப்பு பிரதேச அணி (1ஆம் இடம்)
ஒட்டுசுட்டான் பிரதேச அணி (2ஆம் இடம்)
எல்லே - ஆண்கள்: மணலாறு பிரதேச அணி (1ஆம் இடம்)
மாந்தை கிழக்கு பிரதேச அணி (2ஆம் இடம்)
எல்லே - பெண்கள்: மணலாறு பிரதேச அணி (1ஆம் இடம்)
ஒட்டுசுட்டான் பிரதேச அணி (2ஆம் இடம்)
மென்பந்து கிரிக்கெட் - ஆண்கள்: கரைதுறைப்பற்று பிரதேச அணி (1ஆம் இடம்)
புதுக்குடியிருப்பு பிரதேச அணி (2ஆம் இடம்)
மென்பந்து கிரிக்கெட் - பெண்கள்: ஒட்டுசுட்டான் பிரதேச அணி (1ஆம் இடம்)
மணலாறு பிரதேச அணி (2ஆம் இடம்)
கரப்பந்தாட்டம் - (ஆண்கள்): மணலாறு பிரதேச அணி (1ஆம் இடம்)
ஒட்டுசுட்டான் பிரதேச அணி (2ஆம் இடம்)
கரப்பந்தாட்டம் - (பெண்கள்): மணலாறு பிரதேச அணி (1ஆம் இடம்)
மாந்தை கிழக்கு பிரதேச அணி (2ஆம் இடம்)
கபடி - ஆண்கள்: மாந்தை கிழக்கு பிரதேச அணி (1ஆம் இடம்)
மணலாறு பிரதேச அணி (2ஆம் இடம்)
வலைப்பந்தாட்டம் - ஆண்கள், பெண்கள்: துணுக்காய் பிரதேச அணி (1ஆம் இடம்)
கரம் - ஆண்கள்: ஒட்டுசுட்டான் பிரதேச அணி (1ஆம் இடம்)
துணுக்காய் பிரதேச அணி (2ஆம் இடம்)
கயிறிழுத்தல் - ஆண்கள்: துணுக்காய் பிரதேச அணி (1ஆம் இடம்)
29 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
37 minute ago