2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

வரவேற்கப்பட்ட கிளிநாச்சி சிவநகர் அ.த.க மாணவிகள்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கபடித் தொடரில் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சம்பியனானதுடன், 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் மூன்றாமிடத்தைப் பெற்ற கிளிநாச்சி சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு, கிளிநாச்சியில் நேற்று இடம்பெற்றது.

கிளிநாச்சி மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து குறித்த வீராங்கனைகள் பாடசாலை வரை அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஏனைய பாடசாலை வீராங்கனைகளுடன் ஒப்பிடுகையில், போஷாக்கு, விளையாட்டு வசதிகள் உள்ளிட்டவற்றில் எமது பிள்ளைகள் பின்தங்கி உள்ளதாகவும் இருப்பினும் அத்தனை குறைபாடுகள் மத்தியிலும் குறித்த வீராங்கனைகள் தேசிய ரீதியில் வெற்றி பெற்றுள்ளதாகவும் பாடசாலை அதிபரும், அணித் தலைவிகளும் குறிப்பிடுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--