2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

தடகளப் போட்டிகளில் 17 வயதுப் பிரிவில் 3 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை

Suganthini Ratnam   / 2011 ஜூலை 15 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டிகளில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்று வடமராட்சி வடஇந்து மகளிர் கல்லூரி மாணவி வேலுமயிலு யோகமயிலினி தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் 17 வயதுடையவர்களுக்கான பிரிவில் பங்குபற்றிய இவர் 100 மீற்றர் ஓட்டம், நீளம் பாய்தல், முப்பாய்ச்சல் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

இவ்வீராங்கனை முப்பாய்ச்சல் போட்டியில் 17 வயதுப்பிரிவில் வடமாகாண சாதனையை முறியடித்து 10.36 மீற்றர் தூரம் பாய்ந்து சாதனை நாட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--