2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

யாழ். பல்கலை வீர, வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு 18இல்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

அகில இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வீர, வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உடற்கல்வி அலகினால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மைதானத்தில் விளையாட்டுத்துறையின் மாணவ சங்கத் தலைவர் கோபிநாத் சிவராசா தலைமையில் இந்த நிகழ்வு  நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்னம் கலந்து கொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X