Super User / 2010 ஓகஸ்ட் 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை விளையாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் அகில இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையில் குருநாகல் வெலகெதர விளையாட்டரங்கில் வலைப்பந்தாட்டப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
அடுத்தமாதம் 11ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் யாழ். மாவட்டத்தில் இருந்து 9 அணிகள் பங்குபற்றவுள்ளன.
15, 17, 19 வயதுப் பிரிவு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள இப்போட்டிகளில் 9 மாகாணங்களில் இருந்தும் 345 வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் இருந்து 15 வயதுப் பிரிவில் வடமராட்சி இந்துக்கல்லூரி, யாழ். வேம்படி மகளிர் கல்லூரி, சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளின் அணிகளும்- 17 வயதுப்பிரிவில் தெல்லிப்பளை ஜூனியன் கல்லூரி, சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி, வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றின் அணிகளும்-
19 வயதுப் பிரிவில் தெல்லிப்பளை ஜூனியன் கல்லூரி, புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தாக் கல்லூரி, மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி ஆகியவற்றின் அணிகளும் கலந்துகொள்ளவுள்ளன.
2 hours ago
26 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
26 Dec 2025