Freelancer / 2026 மார்ச் 27 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் உடனான போர் 26 நாட்களை எட்டியுள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் அரசு ஒப்பந்தம் செய்துகொள்ளத் தன்னிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தாலும், அமெரிக்கா இனி ஒப்பந்தம் செய்ய முன்வருமா என்பது சந்தேகமே என்று குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், இந்தப் போரை முடிக்க நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகும் என்று கணித்திருந்தோம். ஆனால் 26 நாட்களிலேயே இலக்குகளை விஞ்சி, கால அட்டவணையை விட வெகுவாக முன்னேறியுள்ளோம். ஈரானியர்கள் மோசமான போர்வீரர்கள், ஆனால் சிறந்தப் பேச்சாளர்கள். ஈரான் தனது அணுசக்தி கனவுகளை நிரந்தரமாகக் கைவிட்டால் மட்டுமே புதிய பாதை பிறக்கும், இல்லையெனில் அமெரிக்கா அவர்களின் மிக மோசமான கனவாக மாறும் என்று தெரிவித்துள்ளார். (a)
14 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
56 minute ago
2 hours ago