2026 மார்ச் 27, வெள்ளிக்கிழமை

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம் நீடிப்பு

Freelancer   / 2026 மார்ச் 27 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் நாட்டின் எரிசக்தி உலைகள் மீதான தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் காலக்கெடுவை மேலும் 10 நாட்களுக்கு நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள அறிக்கையில்,

ஈரான் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, தாக்குதல்கள் நிறுத்தி வைக்கப்படும் காலம் எதிர் வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 8 மணி வரை  நீடிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமுகமான முறையில் முன்னேற்றமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .