Editorial / 2026 மார்ச் 27 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிஸ்கட், ஐஸ்கிரீம் மற்றும் சொக்லேட் உள்ளிட்ட இனிப்புப் பண்டங்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிப்பதில்லை என இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது.
வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் வியாழக்கிழமை (26) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அந்தச் சங்கத்தின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய தாக்கம் மற்றும் அதன் விளைவாக உள்நாட்டு இனிப்புப் பண்ட உற்பத்தித் துறை எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து ஆராய அமைச்சர் இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
பயன்பாட்டுப் பொருட்களின் விலையேற்றம் தற்போது நுகர்வோரால் தாங்கிக்கொள்ள முடியாத மட்டத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் அதேவேளை நுகர்வோர் பாதிக்கப்படுவதைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனத் தெரிவித்தார்.
உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவரின் கருத்து
இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.டி. சூரியகுமார அங்கு கருத்துத் தெரிவிக்கையில்:
"எமது துறையில் சுமார் 50,000 பேர் நேரடியாகவும், 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். நாட்டின் தேவையிலான 95 சதவீத உற்பத்தியை நாமே மேற்கொள்கிறோம். கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 15 பில்லியன் ரூபாவிற்கும் அதிக தொழில்நுட்ப முதலீடுகளைச் செய்துள்ளோம்.
தற்போது எரிசக்திச் செலவு (Utility cost) மற்றும் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் விலையேற்றம் எமக்கு பெரும் சவாலாக உள்ளது. எனினும், எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் எமது விற்பனை அதிகமுள்ள (Season) காலப்பகுதியாகும். எனவே, புத்தாண்டுக் காலம் முடியும் வரை நுகர்வோரின் நலன் கருதி விலைகளை அதிகரிப்பதில்லை என சங்கம் தீர்மானித்துள்ளது."
எதிர்காலத் திட்டமும் கோரிக்கைகளும் மின்சாரக் கட்டணம், எரிவாயு விலை மற்றும் மூலப்பொருட்களின் விலை மேலும் அதிகரித்தால் மட்டுமே, மே மாதத்திற்குப் பின்னர் விலைத் திருத்தம் குறித்து ஆலோசிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன், மூலப்பொருட்களைச் சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிப்பதில் ஏற்படும் தாமதம் மற்றும் கப்பல் கட்டண அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டிய உற்பத்தியாளர்கள், புத்தாண்டு கால விநியோக நடவடிக்கைகளுக்காக தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முறையான ஒரு பொறிமுறையை உருவாக்கித் தருமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
31 minute ago
32 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
32 minute ago
52 minute ago