Lenin Raj / 2026 மார்ச் 27 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மலைநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, ஹட்டன் - டிக்கோயா, தரவளை தோட்ட வனப்பகுதியில் வியாழக்கிழமை (26) பிற்பகல் 2.00 மணியளவில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி மற்றும் பலத்த காற்று காரணமாகத் தீ வேகமாகப் பரவி வருகின்றது. தீ ஏனைய பகுதிகளுக்கும் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் தோட்டத் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாக மத்திய மலைநாட்டின் பல நீர் ஆதாரங்கள் வற்றி வருகின்றன.
இவ்வாறான சூழலில், காடுகள் தீப்பற்றி எரிவதால் எஞ்சியுள்ள நீர் ஆதாரங்களும் முற்றாக அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .