2026 மார்ச் 27, வெள்ளிக்கிழமை

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை நிர்வகித்த ஈரான் தளபதி உயிரிழப்பு

Freelancer   / 2026 மார்ச் 27 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை நிர்​வகித்த ஈரான் கடற்​படைத் தளபதி அலிரேசா, இஸ்​ரேல் விமானப் படை தாக்​குதலில் உயிரிழந்​தார்.

அமெரிக்​கா - ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் இராணுவம் மூடி​யிருக்​கிறது. இதனால், உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய், சமையல் எரிவாயு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டிருக்​கிறது.

ஈரான் கடற்​படை​ தளபதி அலிரேசா டாங்​கிரி, ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யின் பொறுப்​பாள​ராக செயல்​பட்டு வந்​தார். சர்​வ​தேச கடல் போக்​கு​வரத்தை தடுத்து நிறுத்​திய குற்​றத்​துக்​காக அவரை சர்​வ​தேச தீவிர​வா​தி​யாக அமெரிக்க அரசு அறி​வித்​திருந்​தது. இந்த சூழலில், ஈரானின் பந்​தர் அப்​பாஸ் துறை​முக நகரின் பல்​வேறு பகு​தி​களை குறி​வைத்து இஸ்ரேல் போர் விமானங்​கள் நேற்று குண்​டு​களை வீசின.

இதில், அலிரேசா டாங்​கிரி உயி​ரிழந்​தார். ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்தை முடக்​கியதற்​காக அவர் கொலை செய்​யப்பட்​டார் என இஸ்​ரேல் இராணுவம் தெரி​வித்​துள்​ளது. எனினும், அவரது உயி​ரிழப்பை ஈரான் இராணுவம் உறு​தி​செய்​ய​வில்​லை. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .