Lenin Raj / 2026 மார்ச் 27 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரொசேரியன் லெம்பர்ட்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 இந்திய மீனவர்களுக்கும், 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருடச் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் கடந்த மாதம் 19-ஆம் திகதி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட இந்த 10 இந்திய மீனவர்களின் வழக்கு விசாரணை, நேற்று வியாழக்கிழமை (26) மன்னார் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த மாதம் 19-ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் வைத்து 2 படகுகளுடன் குறித்த 10 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்களை வியாழக்கிழமை (26) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த 10 மீனவர்களும் நேற்று மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், குறித்த 10 மீனவர்களுக்கும் 10 வருடச் சிறைத்தண்டனை விதித்து, அதனை 12 மாதங்களுக்கு ஒத்திவைப்பதாகத் தீர்ப்பளித்து அவர்களை விடுவித்தார்.
மேலும், ஒவ்வொரு மீனவருக்கும் தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, வழக்கின் சான்றுப் பொருட்களான படகுகள் உள்ளிட்டவற்றை அரசுடமையாக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
16 minute ago
17 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
17 minute ago
37 minute ago