2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி கிளிநொச்சியில் நடைபெற்ற போட்டிகள்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 02 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி கிளிநொச்சி மாவட்டத்தில் ஆறு மாவட்டப் பாடசாலைகளின் அணிகளுக்கு இடையேயான வலைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகளுடன் ஆண்கள் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டிகளும் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றன.

கிளிநொச்சி இந்துக் கல்லூரி மைதானத்தில் கிளிநொச்சி மாவட்ட கல்விப் பணிப்பாளர் குருகுலராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரஸ்ரீ பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசில்களை வழங்கி கௌரவித்தார்.

வடமாகாண கல்விப் பணிப்பாளர் பா.விக்கினேஸ்வரன் உட்பட மற்றும் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டிகளில் வட மாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு அணிகளுடன் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த அனுராதபுரம் மாவட்ட அணிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--