Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 08 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அம்பாறை மாவட்டத்தின் கால்பந்தாட்ட வரலாற்றில் முதற் தடவையாக சாய்ந்தமருதில் கடற்கரை கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியொன்று இன்று ஆரம்பமானது.
அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையில், சாய்ந்தமருது பிளேங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த கடற்கரை கால்பந்தாட்டப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 10 கழகங்கள் போட்டியிடுகின்றன.
சேர்மன் 2010 வெற்றிக் கிண்ணத்திற்காக நடைபெறும் முதல் போட்டியில் சாய்ந்தமருது பிளேங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழக்தை எதிர்த்தாடிய மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் 10 – 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது.
கடற்கரை கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கல்முனை மாநகர பிரதி மேயர் ஏ.எம்.பஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago