2021 மார்ச் 03, புதன்கிழமை

அம்பாறை, மட்டு மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி

Super User   / 2010 ஒக்டோபர் 10 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சங்கமும் அம்பாறை மாவட்ட பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கமும் இணைந்து அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியொன்றினை நேற்று கல்முனை ஸாஹிறா கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலயம், கல்முனை ஸாஹிரா கல்லூரி, சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயம், கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயம், கல்முனை அல்-பஹ்ரியா வித்தியாலயம், கல்முனை அல்-மிஸ்பா வித்தியாலயம், அம்பாறை சத்தாதிஸ்ஸ  வித்தியாலயம், அம்பாறை டி. எஸ்.சேனநாயக வித்தியாலயம், மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி, மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகள் இச்சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டன.

இச்சுற்றுப்போட்டிக்கான சகல ஏற்பாடுகளையும் அம்பாறை மாவட்ட பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்தின் இணைப்பாளர் அலியார் பைஸர் மேற்கொண்டிருந்தார்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .