Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
இலங்கை கராத்தே சம்மேளனம் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களிடையே நடத்திய கராத்தே போட்டிகளில், 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பிரிவில் இரண்டாமிடத்தினைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தினை வெற்றி கொண்ட மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி மாணவர் எஸ். முஹம்மது மின்ஹாத் - நேற்று பாடசாலை சமூகம் சார்பில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
மேற்படி நிகழ்வின்போது, மாணவர் மின்ஹாத்துக்கு கல்முனை கல்வி வலய விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பான ஆசிரிய ஆலோசகர் ஏ.எஸ். சத்தார் - வெள்ளிப்பதக்கத்தை அணிவிப்பதையும், கல்லூரி அதிபர் எஸ்.எல்.எம். ஜலாலுத்தீன் சான்றிதழை வழங்குவதையும் படங்களில் காணலாம்.
மேற்படி போட்டியில் மாணவர் மின்ஹாத் கலந்து கொள்வதற்கான அணுசரனையினை இலங்கை ஜமாஅதே இஸ்லாமிய அமைப்பு வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago