2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

தேசிய மட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டி; யாழ். அணி காலிறுதிக்கு தகுதி

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

இலங்கை விளையாட்டு அமைச்சின் எற்பாட்டில் தேசிய மட்டத்தில் நடைபெறும் 36ஆவது விளையாட:டுப் போட்டியின் பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் வடமாகாண அணி முதலாவது போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.
    
கண்டி போகம்பரை மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஊவா மாகாண அணியுடன் வட மாகாண அணி மோதிக் கொண்டது. ஐந்து சுற்றுக்கள் கொண்ட இந்தப் போட்டியில் 03 க்கு 02 என்ற அடிப்படையில் வட மாகாண அணி ஊவா மாகாண அணியை வெற்றி பெற்றது.

முதல் இரண்டு சுற்றுக்களை வட மாகாண அணி  27 க்கு 25 புள்ளிகள் என்ற அடிப்படையில் யாழ் மாவட்ட அணி வெற்றிபெற்றது. இரண்டாம் மூன்றாம் சுற்றுக்களை ஊவா மாகாண அணி 25 க்கு 18, 25 க்கு 21 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்ற பெற்றது.

இறுதிச்சுற்றில் இரு அணிகளும் வெற்றி பெறவேண்டும் என்ற துடிப்புடன் விளையாடிய போதிலும் வட மாகாண அணி ஊவா மாகாண அணியை 15 க்கு 12 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றி பெற்று காலிறுதி ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--