2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் இல்லங்களுக்கிடையிலான ஆரம்ப பிரிவு போட்டிகள் ஆரம்பம்

Kogilavani   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை இராம கிருஸ்ண சங்கம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில்  இல்லங்களுக்கு இடையிலான ஆரம்ப பிரிவு விளையாட்டுப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை மாலை 2.00 மணிக்கு கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.

கல்லூரியின் அதிபர் இ.புவனேந்திரன் தலைமையில் நடைபெறும் இப்போட்டியில் கிழக்கு  மாகாண கல்வி திணைக்களத்தின் பிரதிக் கல்வி பணிப்பாளர் சி.மனோகரன் பிரதம அதிதியாகவும்,  டோக்கியோ சீமெந்து நிறுவனம் இரசாயனவியலாளர் க.பாலமுருகன் சிறப்பு விருந்தினராகவும், முன்னாள் ஆசிரியர்களான திருமதி ம.பார்த்தசாரதி,  சா.ரமணீகரன் ஆகியோர் விசேட விருந்தினர்களாகவும் கலந்து கொள்கின்றனர்.

இக்கல்லூரியில் காணப்படும் விபுலாநந்தா, விவேகானந்தா, இராமகிருஸ்ணா, சிவானந்தா ஆகிய  இல்லங்களுக்கிடையில் இப்போட்டி நடத்தப்படுகின்றது.

நாளை சனிக்கிழமை இல்லங்களுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் நடைபெறவுள்ளன.


 
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--