Menaka Mookandi / 2011 ஜூன் 24 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் ஏற்பாட்டில் 'சம் சந்திர சிங்க' வெற்றிக்கிண்ண கால்ப்பந்தாட்டப் போட்டிக்காக யாழ்.மாவட்ட பாடசாலைகளில் இருந்து மூன்று பாடசாலைகள் தென்பகுதிக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்யவுள்ளது.
சென்.பற்றிஸ், இளவாலை கென்றி அரசர்கல்லூரி, வட. யாழ்ப்பாணக் கல்லூரி ஆகிய பாடசாலைகளை வழியனுப்பும் நிகழ்வில் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கலந்து கொண்டு வழியனுப்பி வைத்தார்.
கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரின் வருடாந்த தேசிய கால்ப்பந்தாட்ட போட்டியில் இம்மூன்று பாடசாலைகளும் பங்குபற்றுகின்றன. 16 வயதுக்குட்பட்ட 7பேர் கொண்ட 'சம் சந்திர சிங்க' வெற்றிக்கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டியாக இப்போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
8 hours ago
9 hours ago
25 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
25 Nov 2025