2021 மே 12, புதன்கிழமை

கால்பந்தாட்டத்திற்கு சேவை வழங்கிய பலர் கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டத்தில் கால்பந்தாட்டத்திற்கு ஆற்றிய சேவை காரணமாக பலர் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வு திருகோணமலை மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் பிரபல்யமான கழகங்களிலிருந்து விளையாடிய முன்னாள் வீரர்களால் இந்த பாராட்டு நடத்தப்பட்டது. இதன்போது நீண்டகாலமாக திருகோணமலை கால்பந்தாட்ட சங்கத்தின் செயலாளராக பணியாற்றிய ந.சிங்காரவேலு,  கால்பந்து மத்தியஸ்தர் எஸ்.விஸ்வநாதன், சன்றைஸ் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினர் ஏ.ரி.சிறிசேனா, இலங்கை அணியை  பிரதிநிதித்துவம் வகித்த கோல்காப்பாளர் கார்மேகம், யுத் கழகத்தின் செயலாளர் காதர்,  முன்னாள் வீரர்களான  எஸ்.லக்ஸ்மன், இம்புறு றசாக், எஸ்.கமலநாதன், என்.முருகையா, க.தம்பையா அடங்கலாக  பலர் கௌரவிக்கப்பட்டனர்.

இதனொரு நிகழ்வாக முன்னாள் வீரர்கள் கலந்து கொள்ளும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான  கால்பந்தாட்டப் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் 1980ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் விளையாடிய பல வீரர்கள் கலந்து கொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .