2021 மே 08, சனிக்கிழமை

மன்னார் சென்ட் - சவேரியா அணி சம்பியன்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 13 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

கல்வி அமைச்சு ஏற்பாடு செய்த அகில இலங்கை விளையாட்டுப் போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக பதுளை, ஹாலிஎல மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டிகளில் கால்ப்பந்தாட்ட போட்டிகள் பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் நேற்று மாலை நிறைவு பெற்றன.

19 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் மன்னார் சென்ட் - சவேரியா அணி போட்டி தொடரில் வெற்றிபெற்று சம்பியனானது. இரண்டாம் இடத்தை கடுநேரிய சென் செபஸ்டியன் அணியும், மூன்றாம் இடத்தை கொழும்பு சாஹிரா அணியும் பெற்றுகொண்டன.

மன்னார் சென்ட் - சவேரியா அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பாசிரியர்களாக பிலிப் பிரனாந்து, ரீ.ஜேகப் ஆகியோர் சமூகம் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கால்ப்பந்தாட்ட சுற்றில் சம்பியனான மன்னார் சென்ட் - சவேரியா கல்லூரி அணியில் இடம்பெற்ற வீரர்களையும், பயிற்றுவிப்பாளர், பொறுபாசிரியர் ஆகியோரையும் படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X