2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கிழக்கு மாகாணத்திலிருந்து தேசிய றக்பி போட்டிக்காக தெரிவாகியுள்ள அணியினருக்கு சீறுடை வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)
பாடசாலைகளுக்கிடையிலான தேசிய றக்பி விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவாகியுள்ள அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்துக்குட்பட்ட பாலமுனை ஹிக்மா வித்தியாலயத்தின் றக்பி அணியினருக்கான சீருடை வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஐ.எம். பாஹிம் தலைமையில் நேற்று பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், மாவட்ட சாரண உதவி ஆணையாளருமான எஸ்.எல். முனாஸ் தனது சொந்த நிதியிலிருந்து றக்பி அணி வீரர்களுக்கு பரிசில்களையும், விளையாட்டு அணிக்கான சீருடைகளையும் இதன்போது, வழங்கிவைத்தார்.

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய றக்பி போட்டியில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவாகியுள்ள மூன்று அணிகளில் பாலமுனை ஹிக்மா வித்தியாலய அணியும் ஒன்றாகும்.  

                                                                                            


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--