2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

ஸ்விடிஷ் கிளசிக் சர்வதேச கொல்ப் போட்டியில் சம்பியனாக லிண்டா ஹரிஸ் தெரிவு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 22 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி, இரஜவெல்லை விக்டோரியா கொல்ப் கழகம் ஏற்பாடு செய்த ஸ்விடிஷ் கிளசிக் சர்வதேச கொல்ப் போட்டியில் சம்பியனாக லிண்டா ஹரிஸ் தெரிவானார். இப்போட்டித் தொடர் கண்டி இரஜவெல்ல கொல்ப் விலையாட்டு மைதானத்தில் 18, 19, 20ஆம் திகதகளில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்தியாவில் வசிக்கும் ஸ்வீடன் நாட்டுக்கான தூதுவர் லாஸ் ஒல்ப் லிங்ட்றன் வெற்றிபெற்ற லிண்டா ஹரிஸுக்கான கேடயத்தை வழங்கினார்.

65 வயதுக்கு மேற்பட்டோருக்காக நடத்தப்பட்ட ரொல்ப் டிப்லின் கேடயத்துக்கான போட்டியில் டோனி வித்தம் வெற்றி பெற்றதுடன் அவருக்கான கேடயத்தை ரொல்ப் டிப்பில் வழங்கினார். சிறுவர்களுக்கும் பெண்களுக்குமாக இங்கு பல போட்டிகள் இடம்பெற்றதுடன் அவர்களுக்கு கேடயங்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X