2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

டபிள்யூ.ஆர்.கொல்மஸ் கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 09 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கு.சுரேன்)

யாழ். மாவட்டப் பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு ஆண், பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான டபிள்யூ.ஆர்.கொல்மஸ் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தனது கூடைப்பந்தாட்டத் திடலில் நடத்திவருகின்றது.

இந்நிலையில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட திடலில் நேற்று வியாழக்கிழமை  கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நடைபெற்றது. 

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற கூடைப்பந்தாட்டப் போட்டியில் 50 : 15 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வென்றது.

சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்.ஜோன்ஸ் கல்லூரி 27 : 14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில்  வெற்றிபெற்றது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் மானிப்பாய் ஏஞ்சல் இன்ரநஷனல் பாடசாலைக்கும் இடையில் நடைபெற்ற ஆட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 48 : 07 என்ற புள்ளிகள்; வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற ஆட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி 34 : 07 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதேவேளை, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட திடலில் நேற்று வியாழக்கிழமை  19 வயதுப் பிரிவு பெண்களுக்கான அரையிறுதி கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நடைபெற்றது. 

முதலாவது அரையிறுதியில் யாழ். திருக்குடும்பக் கன்னியர்மடமும் உடுவில் மகளிர் கல்லூரியும் மோதின. அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று ஆட்டத்தில் யாருக்கு வெற்றி என்ற நிலை தெரியாமல் ஆடினர்.  போட்டி முடிவடையும் தருணத்தில் யாழ். திருக்குடும்பக் கன்னியர்மடம் 31 : 30 என்ற ஒரு புள்ளி வித்தியாசத்தினால் உடுவில் மகளிர் கல்லூரியை வெற்றி பெற்றது.

இரண்டாவது அரையிறுதியில் மருதனார் இராமநாதன் மகளிர் கல்லூரியை எதிர்த்து பண்டத்தரிப்பு மகளிர் உயர்தரப் பாடசாலை மோதியது. இதில் தொடக்கம் முதல் இராமநாதன் மகளிர் கல்லூரியின் ஆதிக்கம் காணப்பட்டது. இறுதியில் இராமநாதன் மகளிர் கல்லூரி 34 : 14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .