2021 ஜனவரி 27, புதன்கிழமை

கால்பந்தாட்ட போட்டியில் யாழ். மாவட்ட அணி வெற்றி

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கு.சுரேன்,கிரிசன் )
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால், தேசிய ரீதியில் வீரர்களை தெரிவு செய்வதற்காக, வடமாகாண, மாவட்ட அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டிகள் இன்று சனிக்கிழமை; யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகியது.

இன்றைய முதலாவது போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட அணியினை எதிர்த்து முல்லைத்தீவு மாவட்ட அணி மோதியது. முதல் பாதி ஆட்டத்தில் யாழ்ப்பாண அணி மூன்று கோல்களை போட்டது. முல்லைத்தீவு அணி கோல் எதனையும் பெறவில்லை.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் மேலும் 5 கோல்களை யாழ்ப்பாண மாவட்ட அணி பெற்றுக்கொண்டது.

இறுதியில் யாழ்ப்பாண மாவட்ட அணி 8:0 என்ற கோல் கணக்கில் வென்றது. யாழ்ப்பாண மாவட்ட அணி சார்பாக எம்.நிதர்சன் 4 கோல்களையும், அ.யூட் 2 கோல்களையும், அ.டிலுசன், ரி.துஸ்ஸியந்தன் ஆகியோர் தலா ஒரு கோல்களையும் போட்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட அணி நாளை ஞாயிற்றுக்கிழமை காலையில் கிளிநொச்சி மாவட்ட அணியுடன் மோதவுள்ளது. இன்று சனிக்கிழமை மாலையில் நடைபெறும் போட்டியில் வவுனியா மாவட்ட அணி மன்னார் மாவட்ட அணியுடன் மோதவுள்ளது. மேற்படி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .