2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

மின்னல்வேக கூடைப்பந்தாட்டத்தில் யாழ். சென்ரலைட்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 12 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)


அமரர் பொன் விபுலானந்தன் ஞாபகார்த்தமாக யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஆண்களுக்கான மின்னல்வேக கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் சென்ரலைட்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் இப்போட்டியை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. 

இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் சென்ரலைட்ஸ் விளையாட்டுக்கழகமும் யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழகமும் மோதின.
முதல் பாதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் சென்ரலைட்ஸ் விளையாட்டுக்கழகம் 16 இற்கு 07 புள்ளிகள் என்ற வித்தியாசத்தில் காணப்பட்டது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில்  சென்ரலைட்ஸ் விளையாட்டுக்கழகத்திற்கு 30 இற்கு 24 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் ஆட்டம் முடிவடைந்தது.
ஆட்ட நிறைவில் சென்ரலைட்ஸ் விளையாட்டுக்கழகம் 46 இற்கு 31 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழகத்தை வெற்றி பெற்று பொன் விபுலானந்தன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டது.        


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .