2026 மார்ச் 26, வியாழக்கிழமை

ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு

Editorial   / 2026 மார்ச் 26 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரான் தளபதி அலிரேசா டங்சிரியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கியவர் அலிரேசா டங்சிரி! ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதால் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருந்த சூழலில், அவரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

 மத்திய கிழக்கில் போர் தொடர்ந்து வருகிறது. 4வது வாரமாகப் போர் தொடரும் சூழலில், தற்போது வரை போர் முடிவுக்கு வருவது போலவே தெரியவில்லை. அமெரிக்கா மோதலை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் எடுத்தாலும் கூட இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதலை நடத்தியே வருகிறது. இது பதற்றத்தை அதிகரித்தே வருகிறது.

 மேலும், போருக்கு பிறகு ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் அங்குச் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் வழியாகவே பெரும்பாலான கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி வர்த்தகம் நடக்கும் சூழலில், அது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவிலும் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அலிரேசா டங்சிரி மரணம் இந்தச் சூழலில் தான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரான் தளபதி அலிரேசா டங்சிரியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தெற்கு ஈரானில் நடந்த தாக்குதலில் ஈரானின் கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஈரானின் சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைப் பிரிவுக்குத் தலைமை வகித்த டங்சிரி.. பந்தர் அப்பாஸ் துறைமுக நகரில் நடந்த தாக்குதலில் டங்சிரி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதை மேற்பார்வையிடும் பணிகளை இவரே கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .