Janu / 2026 மார்ச் 26 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில், 38 செல்லப்பிராணிகளை கடத்தி வந்த இலங்கை பயணி ஒருவர், வியாழக்கிழமை (26) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு சட்டம் மற்றும் விலங்கு நோய்கள் தொடர்பான சட்ட விதிகளை மீறி, சுமார் 9 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 38 செல்லப்பிராணிகளை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் வியாழக்கிழமை (26) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்டவர் கண்டி, திகன பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபராவார். அவர் தாய்லாந்தின் பெங்காக் நகரில் இருந்து தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான TG-307 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயண பொதிகளை சோதனையிட்ட போது சிறிய கூடுகளில் அடைத்து மறைத்து வைக்கப்பட்ட கினிப் பன்றிகள், அணில்கள், புறாக்கள், சுகர் கிளைடர்ஸ், முள்ளெலிகள் ஆகிய மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட சுங்க அதிகாரிகள், குறித்த பயணிக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்ததுடன் மீட்கப்பட்ட விலங்குகள் அனைத்தையும் மீண்டும் தாய்லாந்தின் பெங்காக் நகருக்கே திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
டீ.கே.ஜி கபில

28 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
2 hours ago