2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

ரக்பி பயிற்சி முகாம்

Kogilavani   / 2012 நவம்பர் 17 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கு.சுரேன், சுமித்தி)

சப்ரகமுவா ஸ்டேலியன்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் பாதுகாப்பு படை தலைமையகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ரக்பி பயிற்சிப் பட்டறை ஒன்று இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

யாழ்.மாவட்ட பாடசாலைகளின் ரக்பி விளையாடும் வீரர்கள் இப்பயிற்சி பட்டறையில் பங்குபற்றியிருந்தனர்.

ஆண்கள் பெண்கள் இருபாலாருக்குமாக நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் 70 பாடசாலை வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.

யாழ்ப்பாண பாடசாலை மட்டத்தில் ரக்பி போட்டிகள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டு மிகவும் ஆர்வமாக விளையாடப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் ரக்பி அணி தேசிய மட்ட ரக்பி போட்டிகளில் 12 வயதுப் பிரிவில் இரண்டாமிடம் பெற்றிருந்தது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .