2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

பாஸிலோனா அணி சம்பியன்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 19 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கண்டி மஹய்யாவ கிரீன் பாத் விளையாட்டுக் கழகம் ஒழுங்கு செய்த அணிக்கு ஏழு பேர் கொண்ட கால்பந்தாட்ட விளையாட்டுப் போட்டியில் பாஸிலோனா அணி வெற்றிபெற்றது.

இப்போட்டித் தொடர் கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்றது. 16 அணிகள் பங்கு கொண்ட இத்தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற 'பாஸிலோனா' அணியும் 'பிளக் தண்டர்' அணியும் போட்டியிட்டன. 3 - 2 என்ற கோல் வித்தியாசத்தில் பாஸிலோனா அணி வெற்றி பெற்று, வேலு சவால் கேடயத்தையும் பணப் பரிசையும் பெற்றுக் கொண்டது.

கண்டி மாநகர சபை அங்கத்தவர் வீ.சிவஞானம், கண்டி கிரீன் பார்க் விளையாட்டுக் கழகத்தின் தவிசாளரும் கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்திற்கான அமைப்பின் ஏற்பாட்டாளருமான வேலு குமார் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .