2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்றது

Kogilavani   / 2012 நவம்பர் 20 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                     (கு.சுரேன்)
இலங்கை துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற யாழ்.மாவட்டப் பாடசாலைகளின் 13 வயதுப் பிரிவுனருக்கிடையில் மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்  யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றி பெறறுள்ளது.

சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியினை எதிர்த்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி முதல் துடுப்பெடுத்தாடியது.

அணி வீரர்  இயல்ஸ்பெல்மனுடைய அரைச்சதம் கைகொடுக்க ஓட்டங்களை இலகுவாகச் சேர்த்தது அவ்வணி. 42 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை தமது ஆட்டத்தினை நிறுத்திக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இயல்ஸ்பெல்மன் 52 ஓட்டங்களையும், மதுசன், தேனுஜன் முறையே 38, 37 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்டது.
அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 64 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பாக மதுசன் 6 விக்கெட்களையும், சிம்ஸன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பலோ ஒன் முறையில் மீண்டும் தமது இரண்டாவது இனிங்ஸைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி. 17 ஓவர்களில் 42 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்து, இனிங்ஸ் மற்றும் 59 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பந்துவீச்சில் மதுசன் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .