2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு செயலமர்வு

Kogilavani   / 2013 ஜூலை 21 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-
வடமலை ராஜ்குமார்-


விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கான ஐந்து நாள் செயலமர்வொன்று திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

திருகோணமலை கால்பந்தாட்ட சங்கம், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனதுடன் இணைந்து இச்செயலமர்வினை ஏற்பாடு செய்திருந்தது.

திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ்விளையாட்டு செயமலர்வில், 6 முதல் 12 வரையான 350 மாணவர்களுக்கு 30 உடற்கல்வி ஆசிரியர்கள் இப்பயிற்சியினை வழங்கினர்.

இந்நிகழ்விற்கு அதிதிகளாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தென்னாசிய பிராந்தியத்திற்கான மேற்பார்வையாளர் வின்சன்ட் சுப்பிரமணியம், திருகோணமலை நகரசபை தலைவர் க.செல்வராஜா, திருகோணமலை கால்;பந்தாட்ட சங்கத்தின் செயலாளர் க.யோகரெட்னம் ஆகியோர் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--