2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

பொன் அணிகள் போரில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணிகள் ஆதிக்கம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

பொன் அணிகள் போர் கால்ப்பந்தாட்டப் போட்டிகளில் யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
யாழ்.மாவட்டத்தில் பொன் அணிகள் ஆக யாழ். சென்.பற்றிக்ஸ் கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ். கல்லூரி ஆகிய பாடசாலைகள் வர்ணிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இரு பாடசாலைகளின் கால்ப்பந்தாட்ட அணிகள் மோதும் கால்ப்பந்தாட்டப் போட்டிகள் நேற்று வியாழக்கிழமை மாலை (24) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்னெல் மைதானத்தில் நடைபெற்றது.

14, 16, 18, மற்றும் 20 வயதுப்பிரிவு கால்ப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான போட்டிகள் இதன்போது நடைபெற்றது.

14 வயதுப்பிரிவினருக்கான கால்ப்பந்தாட்டப் போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

அதேபோல் 16 வயதுப்பிரிவினருக்கான கால்ப்பந்தாட்டப் போட்டியிலும் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

18 வயதுப்பிரிவு கால்ப்பந்தாட்ட அணிகளுக்கான போட்டியில் யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி கால்ப்பந்தாட்ட அணி தற்போது யாழ்.மாவட்டத்தில் சிறந்து விளங்கும் அணி ஆகையால், எதிர்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி அணியினை 4: 0 என்ற கோல் கணக்கில் வென்றது.

20 வயதுப்பிரிவினருக்கான போட்டி இரு அணிகளும் கோல்கள் எதுவும் பெறாத நிலையில் முடிவடைந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--