2025 ஜூலை 07, திங்கட்கிழமை

உலக இளைஞர் மாநாட்டு சைக்கிளோட்டப் போட்டி

Kogilavani   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் சம்மேளனமும் இணைந்து, உலக இளைஞர் மாநாட்டை முன்னிட்டு நடத்தும் சைக்கிளோட்டப் போட்டிகள் புதன்கிழமை(02) ஆரம்பமாகவுள்ளதாக இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் நாயகமும் தலைவருமான லலித்பியும் பெரெரா செவ்வாய்கிழமை(1) தெரிவித்தார்.

இளைஞர் விவகாரம் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையில் இப்போட்டிகள்  ஐந்து கட்டங்களாக  நடைபெறவுள்ளன.
முதலாம் கட்டப் போட்டி புதன்கிழமை(02) துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து இருந்து வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் வரையும் நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்டப்போட்டி வியாழக்கிழமை (03) மதவாச்சியில் இருந்து ஆரம்பமாகி வாரியப்பொல நகரப் பகுதியினைச் சென்றடையவுள்ளதுடன், மூன்றாம் கட்டப் போட்டி வெள்ளிக்கிழமை (04) குருணாகல மாபிட்டியத்தில் இருந்து ஆரம்பமாகி அவிசாவளையில் வரை சென்றடையவுள்ளது.
நான்காம் கட்டப் போட்டி சனிக்கிழமை (05) இரத்தினபரி சவாலி மைதானத்தில் இருந்து ஆரம்பமாகி மாத்தறை சனத் ஜெயசூரியா மைதானம் வரையும் சென்றடையவுள்ளது.

ஐந்தாம் கட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (06) மாத்தறை சனத்ஜெயசூரிய மைதானத்தில் இருந்து ஆரம்பமாகி இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைமையகம் அமைந்துள்ள மகரகம வரையும் சென்றடையவுள்ளதாக அவர் மேலும்  தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .