2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

யாழ்.மாவட்ட மட்டக் கரப்பந்தாட்டம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 18 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ்

யாழ்.மாவட்ட பாடசாலை கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டிகள் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18) நடைபெற்றது.

யாழ்.மாவட்டத்திலுள்ள 5 வலயங்களிலுமிருந்து தலா 3 அணிகள் என்ற விகிதத்தில் ஒவ்வொரு பிரிவிலும் 15 அணிகள் இந்தக் கரப்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றியிருந்ததுடன், போட்டிகள் விலகல் முறையில் நடைபெற்றன.

இதனடிப்படையில், 15 வயதுப்பிரிவு ஆண்களில் கோப்பாய் மகா வித்தியாலயம் முதலிடத்தினையும், ஆவரங்கால் மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தினையும் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அணி மூன்றாமிடத்தினையும் பெற்றது.

அதே வயதுப்பிரிவு பெண்களில் வசாவிளான் மத்திய மகா வித்தியாலய அணி முதலிடத்தினையும், உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி இரண்டாமிடத்தினையும், பருத்தித்துறை சென்.தோமஸ் அணி மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டன.

17 வயதுப்பிரிவு ஆண்களில் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அணி முதலிடத்தினையும், ஆவரங்கால் மகாஜனக் கல்லூரி அணி இரண்டாமிடத்தினையும், புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அணி மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.

அதே வயதுப்பிரிவு பெண்களில் ஆவரங்கால் நடராஜா இராமலிங்கம் மகா வித்தியாலயம் முதலிடத்தினையும், வாசவிளான் மத்திய மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தினையும், பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டன.
19 வயதுப்பிரிவு ஆண்களில் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி முதலிடத்தினையும், சண்டிலிப்பாய் இந்து கல்லூரி இரண்டாமிடத்தினையும், உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணி மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டன.

அதே வயதுப்பிரிவு பெண்களில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி முதலிடத்தினையும் அளவெட்டி அருணோதயக் கல்லூரி அணி இரண்டாமிடத்தினையும், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டன.

15 வயதுப் பிரிவு ஆண்கள் அணி

17 வயதுப் பிரிவு ஆண்கள் அணி

19 வயதுப் பிரிவு ஆண்கள் அணி

15 வயதுப் பிரிவு பெண்கள் அணி

17 வயதுப் பிரிவு பெண்கள் அணி

19 வயதுப் பிரிவு பெண்கள் அணி  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--