2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

நான்காவது வருடமாக சுழிபுரம் விக்டோரியா சம்பியன்

Super User   / 2014 ஏப்ரல் 20 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


- கனகரத்தினம் கனகராஜ்


யாழ்.மாவட்ட பாடசாலை பெண்கள் துடுப்பாட்ட அணிகளுக்கிடையிலான மென்பந்து துடுப்பாட்ட போட்டியில் 2011 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து நான்காவது வருடமாக சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி பெண்கள் அணி சம்பியனாகியுள்ளது.

யாழ்.மாவட்ட 19 வயதுப்பிரிவு துடுப்பாட்ட அணிகளுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டி  ஞாயிற்றுக்கிழமை (20) குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டுக்கழகத்தில் நடைபெற்றது.

அணிக்கு 11 பேர் 10 பந்துப்பரிமாற்றங்கள் கொண்ட இந்த மென்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் யாழ்.மாவட்டத்தின் ஐந்து வலயங்களிலும் இருந்து தலா 3 அணிகள் என்ற ரீதியில் 15 அணிகள் பங்குபற்றியிருந்தன.

போட்டிகள் அனைத்தும் விலகல் முறையில் நடைபெற்றன.

அதனடிப்படையில், பெண்களுக்கான இறுதிப்போட்டியில் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அணியினை எதிர்த்து வட்டு இந்துக் கல்லூரி அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அணி 10 பந்துபரிமாற்றங்கள் நிறைவில் 4 இலக்குகளை இழந்து 88 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 89 என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய வட்டு இந்து அணி 10 பந்துபரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து 63 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இதனால் 25 ஓட்டங்களால் சுழிபுரம் விக்டோரியா அணி சம்பினாகியது.

தொடர்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி அணியினை எதிர்த்து உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி அணி 10 பந்துபரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு 44 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அணி 9.1 பந்துபரிமாற்றங்களில் 3 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X