2025 ஜூலை 05, சனிக்கிழமை

தெல்லிப்பழை பிரதேச செயலக அணி சம்பியன்

George   / 2015 பெப்ரவரி 02 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்


அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் தெல்லிப்பழை பிரதேச செயலக அணி சம்பியனாகியது.


யாழ். மாவட்ட செலயக நலன்புரிச் சங்கத்தால் வருடாந்தம் நடத்தப்படும் அரச அதிபர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டிகளின் இறுதிப்போட்டி, மட்டுவில் வளர்மதி விளையாட்டுக்கழக மைதானத்தில் சனிக்கிழமை (31) நடைபெற்றது.


கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் தெல்லிப்பழை பிரதேச செயலக அணியை எதிர்த்து வேலணை பிரதேச செயலக அணி மோதியது. போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய தெல்லிப்பழை அணி, முதல் பாதியாட்டத்தில் இரண்டு கோல்களைப் போட்டது.


இரண்டாவது பாதியாட்டத்தில், தெல்லிப்பழை அணி  மேலுமொரு கோலை போட்டு தனது வெற்றியை உறுதி செய்தது. போட்டியின் இறுதி நிமிடங்களில் வேலணை பிரதேச செயலக அணி கோல் ஒன்றை போட்டது. இறுதியில் தெல்லிப்பழை அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.


ஆட்டநாயகனாக தெல்லிப்பழை பிரதேச செயலக அணியை சேர்ந்த டபிள்யு.விஜயபாஸ்கரன் தெரிவுசெய்யப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .