George / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்
கரவெட்டி பிரதேச இளைஞர் விளையாட்டுக்கழகங்களுக்கிடையில் நடைபெற்று வரும் விளையாட்டு நிகழ்வில் எல்லே போட்டியில் ஆண்களில் இமையாணன் அணியும், பெண்களில் டயமன்ஸ் அணியும் சம்பியனாகியுள்ளன.
ஆண்கள், பெண்களுக்கான எல்லே போட்டிகள் அல்வாய் மனோகரா விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது.
8 அணிகள் பங்குபற்றிய ஆண்களுக்கான எல்லே இறுதிப்போட்டியில் இமையாணன் அணியை எதிர்த்து மனோகரா அணி மோதியது. முதலில் ஆடிய இமையாணன் அணி 11 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்தாடிய மனோகரா அணி 9 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
4 அணிகள் பங்குபற்றிய பெண்களுக்கான எல்லே இறுதிப்போட்டியில் டயமன்ஸ் அணியை எதிர்த்து மனோகரா அணி மோதியது. ஆட்டநேரத்தில் இரு அணிகளும் தலா 1 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தன.
மேலதிகமாக வழங்கப்பட்ட 10 பந்துகளிலும் இரு அணிகளும் எவ்வித ஓட்டங்களையும் பெறவில்லை. இதனையடுத்து, நாணயச் சுழற்சியின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டு, டயமன்ஸ் அணி சம்பியனாகியது.
17 minute ago
35 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
35 minute ago
37 minute ago