2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

திஹாரி யூத் விளையாட்டு கழகம் 3 – 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி

Super User   / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அதீம் ஸுபைர்)          

திஹாரி யூத் விளையாட்டு கழகம் கொழும்பு பிரமில் விளையாட்டு கழகத்தை 3 – 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் பிரீமியர் லீக் பிரிவு - III உதைபந்தாட்ட சுற்று  தொடரின் 2ஆம் சுற்றின் ஒரு போட்டி திம்பிரிகஸ்யாய ஹென்றி பேதிரிஸ் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபற்றது.

இப்போட்டியில் திஹாரி யூத் விளையாட்டு கழகமும் கொழும்பு பிரமில் விளையாட்டு கழகமும் மோதின.

ஆரம்பம் முதல் மிகவும் சிறந்த முறையில் விளையாடிய திஹாரி யூத் விளையாட்டு கழகம் இடைவேளையின் வரை 2 - 0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் திஹாரிய யூத் விளையாட்டு கழகம் மேலும் ஒரு கோலை 3 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

திஹாரி யூத் விளையாட்டு கழகம் சார்பாக குறித்த அணியின் தலைவர் மொஹமட் இபாம் மூன்று கோல்களையும் போட்டார்.
கம்பாஹா நகர சபை மைதானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள பிரிவு - III இன் இறுதி போட்டியில் வென்னப்புவ சென். அந்தனீஸ் விளையாட்டு கழகம் மற்றும் திஹாரி யூத் விளையாட்டு கழகம் ஆகியன மோதவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .